இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூன்று வீரர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது. மஹேஷ் தீக்ஷன, பிரபாத் ஜயசூரிய, கமிந்து மென்டிஸ் ஆகியோர் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்கின்றனர். கசுன் ராஜித அணியில் இணைக்கப்ட்டுள்ளார்.
கடந்த போட்டியின் நடுவே கொரோனா காரணமாக மாற்றபப்ட்ட அஞ்சலோ மத்தியூஸ் இந்த போட்டியில் விளையாடுகிறார். தனஞ்சய டி சில்வா இந்த போட்டியில் இல்லாமையினால் அணிக்கு பின்னடைவை ஏற்படும் நிலை காணப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி மாற்றங்களின்றி அதே அணியுடன் விளையாடுகிறது. முதற் போட்டியில் இலகுவான வெற்றியினை அவுஸ்திரேலிய பெற்றுக் கொண்டது.
அணி விபரம்
இலங்கை: 1 பத்தும் நிசாங்க, 2 திமுத் கருணாரட்ன (தலைவர்), 3 குசல் மெண்டிஸ், 4 அஞ்சலோ மத்தியூஸ், 5 தினேஷ் சந்திமால். 6 கமிந்து மென்டிஸ், 7 நிரோஷன் டிக்வெல்ல (வி.கா), 8 ரமேஷ் மென்டிஸ், 9 மஹேஷ் தீக்ஷனா, 10 பிரபாத் ஜயசூரிய, 11 கசுன் ராஜித
அவுஸ்திரேலியா: 1 டேவிட் வார்னர், 2 உஸ்மான் கவாஜா, 3 மார்னஸ் லபுஷேன், 4 ஸ்டீவன் ஸ்மித், 5 டிரவிஸ் ஹெட், 6 கமரூன் கிரீன், 7 அலெக்ஸ் கேரி (வி.கா), 8 மிட்செல் ஸ்டார்க், 9 பட் கம்மின்ஸ் (தலைவர்), 10 நேதன் லியோன், 11 மிட்செல் ஸ்வெப்சன்