ஹார்டிக் பாண்ட்யாவின் அதிரடியான துடுப்பாட்டத்தினாலும், பந்துவீச்சினாலும் இந்தியா அணி முதலாவது 20-20 போட்டியில் வெற்றி பெற்றுக்கொண்டது. ஹார்டிக் பாண்ட்யா மீள் வருகையின் பின்னர் 20-20 போட்டிகளில் நல்ல முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நோர்த்தம்ப்டனில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹார்டிக் பாண்ட்யா 51(33) ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 39(19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. இதில் மொயின் அலி 36 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஹார்டிக் பாண்ட்யா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்தியா அணி 50 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக ஹார்டிக் பாண்ட்யா தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி நாளை?(09.07) மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.