ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொலை

ஜப்பானின் ,முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பான் நாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது சுடப்பட்டார். உடனடியாக வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்து பகுதியில் குண்டு துளைத்துள்ளதாகவும், இரத்தம் அதிகளவில் வெளியேறியிருந்ததாகவும் வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கி சூடு நாடாத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள போதும், துப்பாக்கி சூட்டுக்கான காரணங்கள் தெரியவரவில்லை என ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

67 வயதான ஷின்சோ அபே, ஜப்பானின் அதிக காலம் ஆட்சியிலிருந்த பிரதமராக பெருமை பெற்றரவர். 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையும், 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார். இதே காலத்தில் ஜப்பானின் ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொலை

Social Share

Leave a Reply