பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் தகவல்

பாடசாலைகளை 18 ஆம் திகதி ஆரம்பித்து நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் தொழிற்சங்க சங்க கூட்டமைப்புக்கும், கல்வியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் நேற்று(07.07) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவினை கலவியமைச்சியின் அதிகாரிகள் தெரிவித்ததாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை இன்று வரையில் நடாத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் வாரம் 11 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரை முதலாம் தவணை விடுமுறையென கல்வியமைச்சு இந்த வருட ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.

பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் தகவல்

Social Share

Leave a Reply