இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக செயலாளர் நாயகத்தின் உதவி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
அனைவரும் இணைந்து பேச்சவார்த்தைகள் மூலமாக நாட்டின் பிரச்சசினைகளை தீர்க்கவேண்டும் எனவும், அரசாங்கத்தை அமைத்து, உறுதியான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார். தாம் எப்போதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் ஐ.நா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், பொறுப்பு கூறவேண்டியவர்கள் இந்த வன்முறைகளுக்கு பொறுப்பு கூறவேண்டுமெனவும், அமைதியை பேணுவது கட்டாயம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாம் இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் மேலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
