ஜனாதிபதி விலகுவாரா? மாட்டாரா? அனைவருக்குள்ளும் குழப்பம்.

ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் பதவி விலகும் கடிதத்தை இதுவரையில் தனக்கு அனுப்பி வைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன இன்று(14.07) காலையிலும் உறுதி செய்துள்ளார்.

ஜனாதிபதி தற்போது வரை மாலைதீவிலிருந்து செல்லவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரியளவிலான பணத்தொகையினை மாலைதீவு ஜனாதிபதி பெற்றுக் கொண்டே, ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மற்றும் மத தலைவர்கள் பாராளுமன்றத்தினை கூட்டி அரசாங்கம் ஒன்றை உருவாக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு முன் நடைபெற்ற போராட்டம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சுமூகமான நிலை இல்லாமல், பதட்ட சூழ்நிலை காணப்படுகிறது. அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலையுடன் நீக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இவ்வாறான சூழலில் அடுத்து என்னவென்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பாரளுமன்றமும் உரிய சரியான முடிவினை எடுக்க முடியாத நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் கைகளுக்குள் முழு நாடும் சென்றுள்ளது. எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூறியது போல, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் நம்பிக்கை இல்லை என்ற நிலை மக்ளுக்குள்ளும் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி விலகுவாரா? மாட்டாரா? அனைவருக்குள்ளும் குழப்பம்.

Social Share

Leave a Reply