இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளை மேற்கொண்டு மூன்று மணி நேரத்தில் முடிவுகளை பெறலாம்.
சுற்றுலா பயணிகள் வேகமாக நாட்டுக்குள் வருவதற்கும், கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் இது இலகுவாக அமையும்.
இலங்கை அரசாங்கம் வீழ்ந்த பொருளாதரத்தை கட்டியெழுப்ப சுற்றுலாத்துறையினை அதிகம் நம்பியுள்ளது. அதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனை நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 500 பரிசோதனைகளை செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு பரிசோதனைக்கு 40 டொலர்கள் கட்டணமாக அறிவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.