(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று(16.07) ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் நிறைவில் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 02 விக்கெட் இழப்பிற்கு 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் 222 ஓட்டங்களோடு இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு டினேஷ் சந்திமால் தனித்து போராடி பெற்று கொடுத்த ஓட்டங்களும், மகேஷ் தீக்ஷண பெற்றுக் கொண்ட 38 ஓட்டங்களும் போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொடுத்தது. இறுதி நேரத்தில் மகேஷ் தீக்ஷண சந்திமாலுடன் வழங்கிய இணைப்பாட்டமும், பின்னர் அவர் பெற்றுக் கொண்ட ஓட்டங்களும் இலங்கை அணிக்கு முக்கியமானவையாக அமைந்தன. தனது கூடுதலான ஓட்டங்களை இன்று அவர் பதிவு செய்தார். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக மகேஷ் தீக்ஷன, கஹூன் ரஜித ஆகியோர் 45 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆரம்பம் முதலே தடுமாறிய இலங்கை அணி, மதிய போசனத்துக்கு முன்னரே 4 விக்கெட்களை இழந்தது. மத்திய போசனத்துக்கு பின்னர் மேலும் நான்கு விக்கெட்களை இழந்தது. மோசமாக முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிய நிலையில் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கான ஓட்ட எண்ணிக்கையினை ஓரளவு உயர்த்தினர்.
விக்கெட் வீழ்ந்தால் அடுத்தடுத்து விக்கெட் விழும் நிலை இலங்கை அணியின் மோசமான நிலைப்பாடாகும். இணைப்பாட்டங்களை கட்டியெழுப்புதல் அணியின் பிரச்சினையான விடயம். அதனை இலங்கை அணி சீர் செய்ய வேண்டும். இந்த போட்டியில் மட்டுமன்றி இது ஒரு தொடர் பிரச்சினையாக இலங்கை அணிக்கு காணப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் நேர்த்தியான பந்துவீச்சு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்துள்ளது. குறிப்பாக ஷஹின் ஷா அப்ரிடியின் ஸ்விங் பந்துவீச்சு இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்தது. ஆரம்ப விக்கெட்களை அவரே தகர்த்துக் கொடுத்தார். இந்த போட்டியில் மீள் வருகையினை ஏற்படுத்திய யசீர் ஷா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
சுழற்பந்துவீச்சாளரக்ளுக்கு சாதகம் தரும் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கையின் விக்கெட்களை அதிகமாக கைப்பற்றியுள்ளனர். துடுப்பாட்ட வீரர்களின் பிழையான துடுப்பாட்ட பிரயோகங்கள் இலங்கை அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன.
இலங்கை அணியின் பந்துவீச்சில் கஸூன் ரஜித நல்ல ஆரமபத்தை வழங்கினார். இலங்கை அணி இரண்டாவது வேகப்பந்து வீச்சாளருடன் விளையாடி இருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களது பந்துகள் சிறப்பான முறையில் வேலை செய்கின்றன.
அவுஸ்திரேலிய அணியுடன் சிறப்பாக பந்துவீசிய பிரபாத் ஜயசூரிய 1 விக்கெட்டினை கைப்பற்றிக் கொடுத்துள்ளார். நாளைய இரண்டாம் நாள் துடுப்பாட்டத்தில் காலை வேளையிலேயே பாகிஸ்தான் அணி மீது இலங்கை பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினால் இந்தப் போட்டியில் இலங்கை அணி முன்னிலை பெற்று வெற்றியினை நோக்கி நகரலாம்.
முழுமையான ஸ்கோர் விபரம்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | 13 | 47 | 2 | 0 | ||
| இமாம்-உல்-ஹக் | L.B.W | கசுன் ரஜித | 02 | 16 | 0 | 0 |
| அசார் அலி | 03 | 38 | 0 | 0 | ||
| பாபர் அசாம் | 01 | 07 | 0 | 0 | ||
| 05 | ||||||
| ஓவர் 18 | விக்கெட் – 01 | மொத்தம் | 24 | |||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | கசுன் ரஜித | 05 | 02 | 11 | 01 |
| 2 | மகேஷ் தீக்ஷண | 09 | 04 | 11 | 00 |
| 3 | பிரபாத் ஜயசூரிய | 04 | 03 | 02 | 01 |
| 4 | |||||
| 5 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 | |
| 1 | ஓஷட பெர்னாண்டோ | பிடி – ரிஷ்வான் | ஹசன் அலி | 35 | 49 | 5 | 0 |
| 2 | திமுத் கருணாரட்ண | Bowled | ஷஹீன் அப்ரிடி | 01 | 07 | 0 | 0 |
| 3 | குசல் மென்டிஸ் | பிடி – ரிஷ்வான் | யாசிர் ஷா | 21 | 35 | 3 | 0 |
| 4 | அஞ்சலோ மத்யூஸ் | பிடி – நஸீம் ஷா | யாசிர் ஷா | 0 | 15 | 0 | 0 |
| 5 | தினேஷ் சந்திமல் | பிடி – யாசிர் ஷா | ஹசன் அலி | 76 | 115 | 10 | 1 |
| 6 | தனஞ்சய டி சில்வா | Bowled | ஷஹீன் அப்ரிடி | 14 | 28 | 2 | 0 |
| 7 | நிரோஷன் டிக்வெல்ல | பிடி – சல்மான் | ஷஹீன் அப்ரிடி | 04 | 04 | 1 | 0 |
| 8 | ரமேஷ் மென்டிஸ் | பிடி – ரிஷ்வான் | நசீம் ஷா | 11 | 41 | 1 | 0 |
| 9 | பிரபாத் ஜயசூரிய | L.B.W | மொஹமட் நவாஸ் | 03 | 09 | 0 | 0 |
| 10 | மகேஷ் தீக்ஷண | பிடி – ரிஷ்வான் | ஷஹீன் அப்ரிடி | 38 | 65 | 4 | 1 |
| 11 | கசுன் ரஜித | 12 | 32 | 1 | 0 | ||
| உதிரிகள் | 07 | ||||||
| ஓவர் 66.1 | விக்கெட் – 10 | மொத்தம் | 222 | ||||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | ஷஹீன் ஷா அப்ரிடி | 14.1 | 03 | 58 | 04 |
| 2 | ஹசன் அலி | 12 | 02 | 23 | 02 |
| 3 | நசீம் ஷா | 13 | 04 | 53 | 01 |
| 4 | யாசிர் ஷா | 21 | 04 | 66 | 02 |
| 5 | மொஹமட் நவாஸ் | 06 | 02 | 18 | 01 |