எரிபொருள் பதுக்கிய முன்னாள் அரச ஊழியர் கைது

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெண்ணையினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கு அமைய முள்ளியவளை 4ஆம் வட்டாரம் பகுதியில் வீடு ஒன்றினை சோதனை செய்தவேளை 4 பரல்களில் பதுக்கிவைத்திருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணைய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று(15.07) மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

எரிபொருள் பதுக்கிய முன்னாள் அரச ஊழியர் கைது

Social Share

Leave a Reply