இன்று(18.07) முதல் இலங்கையில் அவசரக கால சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
“இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானதாகவுள்ளதென நான் அபிப்பிராயப்படுவதினால் ஜூலை 18 ஆம் திகதி முதல் அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்கிறேன்” என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு