ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து விலக தான் தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்கே தெரிவித்துள்ளார். ஆனால் தனது நிபந்தனைககளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அதற்கு தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் குறித்த பதவிகளை தொடர்ந்தும் தக்க வைக்க முயற்சி செய்யாத இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவுக்கு பரிந்துரை செய்தால் தான் விலகுவதாகவே அவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டின் அசாதரண நிலையினை சீர்செய்ய குறுகிய கால திட்டங்களை உடைய இருவர் மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளகூடிய இருவராக அமையும் பட்சத்தில் தான் விலகுவதாக மேலும் அவர் கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்ட நபர்களுடன் சந்திப்பினை நிறைவு செய்துவிட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
