ஸ்ரீலங்கா பொதுஜன பாரளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன பிரதமராக இன்று(22.07) காலை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று ஏற்கனவே பதவிகளில் காணப்படும் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவிப்பிரமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு மற்றைய கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணையும் பட்சத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒன்றாக கல்வி கற்றவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.