கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பில் போராட்டகாரர்கள் மீது நடாத்தப்பட்ட இராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புது டெல்லியில் நேற்று போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“க்ரன்டிகாரி யுவா சங்கதன்” அமைப்பே இந்த போராட்டத்தைசெய்துள்ளது. போராட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக பதாதைகளை காண்பித்து போராட்டங்களை நடாத்தியுள்ளனர்.