நவம்பர் நடுபகுதியிலேயே இலங்கை வழமைக்கு திரும்பும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
வருகின்ற வாரங்கள் மிக முக்கியமானவை. மக்கள் இந்த காலப்பகுதியில் அவதானமாக, பொறுப்பானவர்களாக செயற்பட வேண்டும். அப்போதுதான் தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் காப்பாற்ற முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் சனத்தொகையில் 50 சதவீதமானவரக்ளுக்கு மேல் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. தடுப்பூசிகளை சிறப்பாக ஏற்றிய நாடுகளுள் இலங்கையும் முன்னிலையுள்ளது. இதே வேகத்தில் சென்றால் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசிகளை ஏற்றிவிட முடியும்.
தொற்று மிகவும் குறைவடைந்து நாம் அனைவரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் முழுமையான பழைய நிலைக்கு திரும்பலாம் என அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இந்த கருத்துக்களை ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
