முன்னணியில் இலங்கை அணி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானதிலிருந்து)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் இலங்கை அணி முன்னிலையில் காணப்படுகிறது. துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. போட்டி நிறுத்தப்படும் போது, 07 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்ற நிலையில் காணப்படுகிறது.

அஹா சல்மான் தனித்து நின்று போராடி ஓட்டங்களை பெற்று வருகிறார். கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்த அப்துல்லா சபிக் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். பாபர் அஷாமும் பிரகாசிக்க தவறியமை பாகிஸ்தான் அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது.

இலங்கை அணி சார்பாக ரமேஷ் மென்டிஸ் 03 விக்கட்களை கைப்பற்றியுள்ளார். இலங்கையின் பந்துவீச்சு பாகிஸ்தான் அணியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால் இந்த இன்னிங்சில் இலங்கை அணி முன்னிலை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே அழுத்தத்தை வழங்கி முன்னிலை பெற்றாலே இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றியினை நோக்கி நகர முடியும்.

முதற் போட்டியில் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணியினை நான்காம் இன்னிங்சில் துரத்தியடித்து பாகிஸ்தான் அணி சாதனை படைத்தது.

இலங்கை அணி பெற்றுள்ள 378 ஓட்டங்கள் இந்த மைதானத்தில் சிறந்த ஓட்ட எண்ணிக்கை. இன்று காலை இலங்கை அணி ஓட்டங்களை பெற ஆர்மபித்த போதும், பின்வரிசை விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டதனால் மிகப்பெரிய இலக்கு நோக்கி செல்ல முடியவில்லை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 103 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது, சிறப்பான ஆரம்பம் ஒன்றை இலங்கை அணி பெற்ற போதும், அடுத்தடுத்த மூன்று விக்கெட்களை இழந்தமையினால் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோரது இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணி மீண்டு வந்த நிலையில் மத்தியூஸ் ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்காக தொடர்ந்தும் ஓட்டங்களை பெற்று வரும் டினேஷ் சந்திமால் தொடர்ச்சியான ஐந்தாவது 50 இற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையினை பெற்று ஆட்டமிழந்தார். சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகியோரது இணைப்பாட்டம் மீண்டும் இலங்கை அணியினை நம்பிக்கையான நிலைக்கு உயர்த்தியது. இறுதி நேரத்தில் நிரோஷன் டிக்வெல்ல பெற்றுக் கொண்ட ஓட்ட எண்ணிக்கை இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட ஆரம்பத்தில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த வேளையில் ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். அவரும் திமுத் கருணாரட்னவும் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்களை இலங்கை அணி இழந்த தடுமாறியது. மதிய போசனத்துக்கு பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பித்த வேளையில் தேவையற்ற துடுப்பாட்ட பிரயோகம் மூலமாக அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைப்பாட்டம் கட்டியெழுப்பப்படட்டு நகர்ந்து செல்லும் வேளையில் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக யசீர் ஷா, நஸீம் ஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


இந்த போட்டியில் இரு அணிகளும் தலா இவ்விரு மாற்றங்களை செய்து விளையாடுகின்றன. பாகிஸ்தான் அணி சார்பாக உபாதையடைந்த ஷஹின் ஷா அப்ரிடிக்கு பதிலாக நௌமன் அலி இணைக்கப்பட்டுள்ளார். அஷார் அலி நீக்கப்பட்டு, பவாட் அலாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜித்த நீக்கப்பட்டு, அசித்த பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார். மகேஷ் தீக்க்ஷனுக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் டுனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா ஷபிக்Bowledஅசித்த பெர்னாண்டோ000200
இமாம்-உல்-ஹக்Bowledதனஞ்சய டி சில்வா325440
பாபர் அசாம்Bowledபிரபாத் ஜயசூரிய163430
மொஹமட் ரிஸ்வான்L.B.Wரமேஷ் மென்டிஸ்243530
பவாட் அலாம்L.B.Wரமேஷ் மென்டிஸ்246910
அகா சல்மான்பிடி – தனஞ்சயபிரபாத் ஜயசூரிய6212841
மொஹமட்  நவாஸ்பிடி – நிரோஷன் டிக்வெல்லரமேஷ் மென்டிஸ்123710
யசிர் ஷா  136101
நௌமன் அலி     
ஹசன் அலி     
நசீம் ஷா      
   08   
ஓவர் 69.4விக்கெட் – 07மொத்தம்191   
      
 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1அசித்த பெர்னாண்டோ14014901
2பிரபாத் ஜயசூரிய27.4075902
3ரமேஷ் மென்டிஸ்18054203
4தனஞ்சய டி சில்வா04001501
5டுனித் வெல்லாலகே06011800
 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷத பெர்னாண்டோபிடி –  மொஹமட் ரிஸ்வான்மொஹமட்  நவாஸ்507043
2திமுத் கருணாரட்ணபிடி –  நசீம் ஷாயாசிர் ஷா409030
3குசல் மென்டிஸ்Run Out031000
4அஞ்சலோ மத்யூஸ்பிடி –   மொஹமட் ரிஸ்வான்நௌமன் அலி4210650
5தினேஷ் சந்திமல்பிடி -பவாட் அலாம்மொஹமட்  நவாஸ்8013792
6தனஞ்சய டி சில்வாBowledநசீம் ஷா 336031
7நிரோஷன் டிக்வெல்லபிடி –  மொஹமட் ரிஸ்வான்நசீம் ஷா423321
8டுனித் வெல்லாலகேபிடி –   பாபர் அஸாம்நசீம் ஷா 112020
9ரமேஷ் மென்டிஸ்Bowledயாசிர் ஷா355241
10பிரபாத் ஜயசூரியL.B.Wயாசிர் ஷா081700
11அசித்த பெர்னாண்டோ  041310
 உதிரிகள்  21   
 ஓவர் 103விக்கெட் – 103மொத்தம்378   
       
 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.ஓவி
1ஹசன் அலி1703590
2நசீம் ஷா 1803583
3நௌமன் அலி2102641
4அஹா சல்மான்0600250
5மொஹமட்  நவாஸ்1903802
6யாசிர் ஷா2202833
முன்னணியில் இலங்கை அணி

Social Share

Leave a Reply