காலி முகத்திடல் போராட்டக்களத்தை சேர்ந்த போராட்டக்காரர் டனிஸ் அலி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி தேசிய தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்து ஒளிபரப்புக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
டுபாய்க்கு பயணிப்பதற்காக விமான நிலையம் சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ள போதும், விமானத்துக்குள் வைத்து அவரை கைது செய்ய முயற்சித்ததாகவும், அதற்கு பயணிகள் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகின்றன.
