திருமலையில் இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று (29) காலை 8 மணி அளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிண்ணியா- சூரங்கள் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் 24 வயது உடைய இராணுவ சிப்பாய் எனவும், விடுமுறைக்கு வீட்டுக்கு சென்று கடமைக்கு திரும்பும் வேலையில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். .

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.

Social Share

Leave a Reply