அமெரிக்க – இந்திய முக்கியஸ்த்தர்கள் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தை.

அமெரிக்க உள்துறை செயலாளர் அன்டனி ப்லிங்கின் மற்றும் இந்தியா வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் இலங்கை தொடர்பில் முக்கிய சந்திப்பு ஒன்று கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் உள்துறை செயலாளர் அடங்கிய உயர் மட்ட குழுவுக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் உள்ளடங்கிய உயர் மட்டக்குழுவுக்கும் இடையில் “ஆசியான்” கூட்ட தொடரின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றது. ரஸ்சியாவின் யுக்ரைன் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல் நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆசியான் மாநாட்டின் முன்னதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்காவின் உள்துறை செயலாளர் அன்டனி ப்லிங்கின் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இலங்கையில் சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில், மேலும் ஜனநாயக ரீதியிலான நாடாக உருவாக வேண்டுமென அன்டனி ப்லிங்கின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சர்வதேச நாணய நிதிய திட்டங்களில் முக்கிய பங்கெடுத்து செயற்படவேண்டுமென அலி சப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையிலும் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க - இந்திய முக்கியஸ்த்தர்கள் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தை.

Social Share

Leave a Reply