தொங்கவிடப்படும் சடலங்கள்-தலிபான்களின் கொடூரம்

மரணதண்டனை மற்றும் அங்கங்களை வெட்டுதல் போன்ற கொடூர தண்டனைகள் மீண்டும் தொடருமென ஆப்கானின் சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி முல்லா நூருதீன் துராபியால் அண்மையில் ஏபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததையடுத்து தற்போது ஆப்கானில் சடலங்கள் தொங்கவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சடலங்கள் நகரின் மையத்தில் ஒருவரது உடலும் ஏனைய மூவரது சடலங்கள் சதுக்கத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொழிலதிபரொருவரையும், அவரது மகனையும் கைதுசெய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் குறித்த நபர்கள் கொலைசெய்யப்பட்டதாக உள்ளூர் செய்திகள் கூறியுள்ள நிலையில், பிரதி ஆளுநர் ஒருவரால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கடத்தல்காரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், காட்சிப்படுத்தப்பட்ட சடலங்கள் இனிமேலும் யாரும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனும் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தலிபான்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொங்கவிடப்படும் சடலங்கள்-தலிபான்களின் கொடூரம்

Social Share

Leave a Reply