உலக 20-20 தொடருக்கு இலங்கை அணியினை தயார் செய்யும் நோக்கில் இலங்கை கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்குபற்றும் கிரிக்கெட் தொடர் நாளை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை வீரர்கள் சிவப்பு, பச்சை, நீலம், சாம்பல் ஆகிய நிறங்களினால் அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த தொடரில் பங்குபற்றவுள்ளனர். இந்த போட்டிகளை இலவசமாக பார்வையிடலாம் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் மோதி முதலிரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இந்த தொடரை சியத்த தொலைக்காட்சியிலும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் youtube பக்கத்திலும் பார்வையிடலாம்.
போட்டி விபரங்கள்
திங்கள் 08 – பிற்பகல் 3.00 மணி சாம்பல் எதிர் சிவப்பு
இரவு 7.30 மணி நீலம் எதிர் பச்சை
புதன் 10 – பிற்பகல் 3.00 மணி பச்சை எதிர் சிவப்பு
இரவு 7.30 மணி சாம்பல் எதிர் நீலம்
சனி 13 – பிற்பகல் 3.00 மணி சாம்பல் எதிர் பச்சை
இரவு 7.30 மணி நீலம் எதிர் சிவப்பு
திங்கள் 15 – இரவு 7.30 இறுதிப் போட்டி



