அகில இலங்கை பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் மங்கள மத்துமகே சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமையில் வைத்து முச்சக்கர வண்டியில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அண்மைய போராட்டங்களில் இவர் தொடர்ச்சியாக பங்கெடுத்து வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
