மூடப்பட்டது கோட்டா கோ கம.

முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையினை ,முன்வைத்து அவருக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நான்கு மாதங்கள் கடந்த நிலையில், இன்று காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்களில் அரசியலில் பலமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகியது,பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க பிரதமரானது , ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமது அமைச்சு பொறுப்புகளில் இருந்து விலகியது, பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்தது,கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியபின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தது, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றது என முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்றது இந்த காலப்பகுதிகளிலேயே.

இப்படி அரசியலில் பல மாற்றங்கள் நடக்க இந்த ஆர்ப்பாட்டமே பிரதான காரணமாக இருந்ததாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து வெளியேறி போராட்டத்தினை வேறு வடிவத்தில் முன்னெடுத்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர். போராட்ட இடம் கைவிடப்படுகிறதே தவிர போராட்டம் கைவிடப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளார்கள்.

மூடப்பட்டது கோட்டா கோ கம.

Social Share

Leave a Reply