வவுனியாவில் மீண்டும் கொவிட் தொற்று காரணமாக ஒருவர் இருந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கொவிட் தொற்று காரணமாக குறித்த குடும்பஸ்தர் இன்று (09.08) மரணமடைந்துள்ளார்.
இறந்தவர் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் என சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
