இறுதிப்போட்டிக்கு தெரிவானது சிவப்பு மற்றும் நீலம்

இலங்கை கிரிக்கெட் சிவப்பு மற்றும் இலங்கை கிரிக்கெட் நீலம் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிவப்பு அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது. தோல்வியடைந்த போதும் ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நீலம் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிவப்பு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய சிவப்பு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் மென்டிஸ் 86(60) ஓட்டங்களையும், வனிது ஹசரங்க ஆட்டமிழக்காமல் 69(41) ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் 123 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். பந்துவீச்சில் சுமிந்த லக்ஷன் 2 விக்கெட்களையும், சமிக்க கருணாரட்ண, தில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நீலம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. இதில் சதீர சமரவிக்ரம 40(38) ஓட்டங்களையும், லஹிரு உதர 35(25) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஷித பெர்ணான்டோ, வனிது ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், மஹேஷ் தீக்ஷண, டுனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக வனிது ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டி நாளை (15.08)மாலை 7.30 இற்கு கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

(வி.பிரவிக் – தரம் 04)

இறுதிப்போட்டிக்கு தெரிவானது சிவப்பு மற்றும் நீலம்

Social Share

Leave a Reply