முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்ப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் தேதி இலங்கை விமானப்படை கிபிர் விமானங்கள் நடாத்திய விமான குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் ஏழு பேர் உள்ளடங்களாக 61 பேரினுடைய 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெளிச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலே விமான தாக்குதல் மேற் கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் என பலர் இணைந்து குறித்த செஞ்சோலை வளாகத்தில் பொதுச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அக வணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தி உணர்வெளிச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.