துப்பாக்கி சூட்டு சந்தேக நபர் கைது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரபல நபரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக்க என்பவரது குழுவின் முக்கிய நபரான ‘கதீர” என அழைக்கப்படும் ப்ரபோத குமார பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான இந்த நபர் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் அதேவேளை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி வெலிகம பகுதியில் வைத்து ‘சூட்டி மாமா’ என அழைக்கப்படும் நபரை கொலை செய்த வழக்கு, மே 14 ஆம் திகதி ‘ஜக்கா’ என அழைக்கப்படும் ரொஷான் எனும் நபரை சுட்டு காயப்படுத்திய வழக்கு ஆகியவற்றின் பிரதான சந்தேக நபராக இவர் தேடப்பட்டு வருபவர் எனவும் இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ஹரக் கட்டாவின் வழிநடத்தலில் நடாத்தப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கதீர கைது செய்யப்படும் போது மூன்று வகையான 8 துப்பாக்கிகள், 3 துப்பாக்கி ரவைகள், 17 கிராம் ஹெரோயின் ஆகியவனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply