முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை.

இன்று முதல் உடனுக்கு அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அபராதம் விதிக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் முட்டையின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது. அவ்வாறான நிலையில் 5 ரூபாவினால் முட்டையின் விலையை குறைப்பதாக முட்டை விற்பனையாளர் சங்கம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் முட்டையின் விலை சராசரியாக 65 ரூபா அளவில் காணப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply