பதவியேற்க தயாராகும் தேசிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அமைச்சரவையில் மொத்தமாக 30 கபினட் அமைச்சர்கள்
நியமிக்கப்படவுள்ளதோடு புதிதாக அமைச்சரவைக்கு வருபவர்களுக்கு இடமளிக்கும் வகையில் தற்போது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அமைச்சரைகளை வைத்திருப்பவர்களது அமைச்சுக்கள் மாற்றப்படவுள்ளன.

தற்போதைய அமைச்சர்களது அமைச்சு பொறுப்புகள் புதியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமென தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் கூறப்பட்டு வருகின்றது.

மேலும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பலர் தங்களுடைய கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டினை பொருட்படுத்தாமல் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாகவும், தொடர்ந்தும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதும் புதிய அரசாங்கமானது பல்வேறு அரச நிறுவனங்களின் தலைவர்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அதிகமாக எதிர்பார்க்கபடுகிறது.

இராஜாங்க அமைச்சர்களாக 40 பேர் நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply