அதிக உணவு பணவீக்கம் கொண்ட முதல் 5 நாடுகளுக்குள் இலங்கை

இலங்கையில் பணவீக்கம் அதிகமானதால் பாரிய பிரச்சனைகளுக்கு அரசும் மக்களும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை மாதம் அளவில் பணவீக்கமானது 82.5 வீதமாக அதிகரித்திருந்தது.

உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவு பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 வதாக உள்ளது.

இந்த பட்டியலில் லெபனான் முதலிடத்திலும் அதனை தொடர்ந்து சிம்பாபே, வெனிசுலா, துருக்கி ஆகியவை உள்ளன. ஐந்தாவது இடத்தில் உள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டீனா, சுரினாம்,எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் உள்ளன.

உணவுப் பொருட்களின் விலை உயர்வானது உலகளாவிய நெருக்கடியைத் தூண்டியுள்ளதாக உலக வாங்கி தெரிவித்துள்ளது.

 

Social Share

Leave a Reply