போராட்டங்களில் ஈடுபட்ட குற்ற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்பு காவலின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, கலேவெவ ஸ்ரீதர்மா தேரர், மற்றும் ஹஸந்த ஜீவந்த குணதிலக ஆகியோரை நெருங்கய உறவினர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு அதற்கான அனுமதி கடிதம் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூவரையும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் பார்வையிட பயங்கரவாத தடுப்பு பிரிவு அனுமதி வழங்கியுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர் நுவான் போபகே தெரிவித்துள்ளார். வார நாட்களில் ஒரு நாள் காலை 9 மணி முதல் 4 மணி வரையான நேரப்பகுதியில் சந்தேக நபர்களது உறவினர்கள் என கிராம சேவையாளரினால் உறுதிப் படுத்திய கடிதத்தினை கொண்டு செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.