நாடு ஒக்டோபர் 01 ஆம் திகதி திறக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதர நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதார துறை, பொது போக்குவரத்து, விவசாயம், அரச மற்றும் தனியார் துறைகள் தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஜெனரல் ஷவேந்திரா சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து துறையினருக்கும், தங்களது பரிந்துரைகளை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்களுக்கு சுகாதர நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
