பயங்கவாத தடை சட்டத்தை நீக்க கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் M.A சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இலங்கை முழுவதுமாக கையெழுத்து போராட்டத்தை நடாத்தி வந்தனர்.
நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக அந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைள் நிறுத்தப்பட்டிருந்தன. சமலகாலத்தில் பயங்கரவாத தடை சட்டம் பாவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கையெழுத்து போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுவதாகவும், எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக நகர மட்டங்களில் இல்லாமல் கிராம மட்டங்களில் நடைபெற்று வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டம் அது நீக்கப்படும் வரை தொடர்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நகரம் நகரமாக செய்த போராட்டத்தை இடை நிறுத்தியிருந்தாலும், கிராமங்களில் அது தொடர்ந்து நடைபெற்றது. திரும்பவும் நாடு பூராக இப் போராட்டம் விரைவில் மீழெழுச்சி பெறும்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.