தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2.30 இற்கு இலங்கை மன்ற நிறுவகத்தில் “அடக்கு முறைக்கு எதிரான மக்கள் அணி திரள்வு எனும் நிகழ்வு” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், கலைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் அனைவரும் பங்குப்பற்ற முடியுமெனவும் அதற்கான அழைப்பினை விடுவதாகவும் மேலும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
