ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு பயணமானது இலங்கை

இலங்கை கிரிக்கட் அணி இன்று(24.08) பிற்பகல் 2.30 மணியளவில் ஐக்கிய அரபு இராட்சியத்துக்கான பயணத்தினை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திலிருந்து ஆரம்பித்தது. இலங்கையின் ஏற்பாட்டில், ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்குபற்றவே இலங்கை அணி அங்கு சென்றுள்ளது.

இலங்கை, தொடரின் முதலாவது போட்டியில் 27 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் இன்று நிறைவடையும் தெரிவுப் போட்டிகளில் வெற்றி பெறுமணி ஆறாவது அணியாக இணையவுள்ளது.

இலங்கை அணி விபரம்

தஸூன் சாணக்க (தலைவர்), தனுஷ்க குணதிலக, பத்தும் நிசங்க, சரித் அசலங்க(உபதலைவர்), குஷல் மென்டிஸ், பானுக்க ராஜபக்ஷ, அஷேன் பண்டார, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, ஜெப்ரி வண்டர்சாய், பிரவீன் ஜெயவிக்ரம, பினுர பெர்னாண்டோ, சமிக்க கருணாரட்ன, டில்ஷான் மதுசங்க, மதீச பத்திரன, அசித்த பெர்னாண்டோ, ப்ரமோட் மதுஷான்

Social Share

Leave a Reply