இன்று(24.08) மூன்று துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இன்று மாலை காலி, எல்பிட்டிய பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
முன்னதாக இன்று பகல் வேளையில் கம்பஹா பகுதியில் வியாபார நிறுவனம் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். காலி, அகுங்கல பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்நது நடைபெற்று வருகின்றன. கொளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட வருகின்றனர்.