ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்திருந்த நிலையில், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு பொது மன்னிப்பு வழங்கும் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.

நேற்றைய தினம் கடிதம் மூலமாக நீதிமன்றத்திடம், நீதி துறையிடமும் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கோரியிருந்தார். இன்று அல்லது திங்கட்கிழமை ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என அமைச்சர் ஹரின் பெர்னான்டோ நேற்று கூறியிலிருந்த நிலையில், இன்று ஜனாதிபதி மன்னிப்பு கடிதத்தில் கையையொப்பமிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் எந்த நேரத்திலும் ரஞ்சன் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்.

Social Share

Leave a Reply