கடந்த ஜூலை 9 ஆம் திகதி பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்த சந்தர்ப்பத்தில் அங்கு காணப்பட்ட கட்டில் போர்வையை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்க கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் நீதவான் திலின கமகே இன்று (26.08) உத்தரவிட்டார்.
மத்திய கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினர் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்
நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.