பல ஆறுகளில் நீர் மட்டம் உயர்வு

தற்போது நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு, ஜின் மற்றும் நில்வலா போன்ற ஆறுகளின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளதோடு களு கங்கையின் தாழ்வான பகுதிகளிலும் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக நேற்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் 08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply