-ஷார்ஜாவிலிருந்து விமல்-
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டாம் சுற்றின் போட்டி இன்று(07.09) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி மிகவும் முக்கியக்கமானதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா அணியினாலும், ரசிகர்களினாலும் அதிகமாக இன்றைய போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளை முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி அச்சுறுத்தலாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய போட்டி ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிவிடும். அவ்வாறன நிலை ஏற்பட்டால் மீதமுள்ள இரண்டு போட்டிகளும் பயனற்றவை ஆகிவிடும்.
இன்று ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால், நான்கு அணிகளது நிலைமையும் சந்தேகமான நிலைக்கு சென்றுவிடும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ஓட்ட சராசரி வேகம் ஹீரோ ஆகிவிடும். நமக்கு அணிகளுக்குமான வாய்ப்பும் இருக்கும்.
இந்தியா அணி நாளைய ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று, பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோல்வியடைந்தால் இந்தியா இறுதிப் போட்டிக் தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கும். ஆப்பானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, பாகிஸ்தான் அணி இலங்கை அணியினை வெற்றி பெற்றால் மூன்று அணிகளில் ஓட்ட சராசரி வேகத்தில் முதலிரு இடங்களை பெறுமணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். இந்தியா அணி வெளியேற்றப்படும்.
ஆப்கானிஸ்தான் அணி இன்று வழங்கப்போகும் முடிவிலேயே இந்த தொடரின் விறுவிறுப்பு தங்கியுள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றால் இலங்கை அணியுடன் போராட தேவையில்லை, அழுத்தத்துக்கு உள்ளாக தேவையில்லை என்ற நிலையில் இறுதிப் போட்டிக்கு சென்று விடும்.
ஷார்ஜா மைதானம் இரு அணிகளுக்கும் சாதகமான மைதானம். இரு அணிகளுமே அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். மைதான ஆதரவும் இரு அணிகளுக்கும் உண்டு. அதன் காரணமாக போட்டி விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானம். ஓட்டங்கள் இன்றும் குவிக்கப்படும். பாகிஸ்தான் அணி இந்தியா அணியுடன் முதற் போட்டியில் தோல்வியினை சந்தித்த போதும் மீள் வருகையினை மிகவும் சிறப்பாக ஏற்படுத்தியுள்ளனர்.
பலமான அணியாக பாகிஸ்தான் அணி மாறியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியுடன் இரண்டாவது சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் கடுமையான போராட்டத்தை வழங்கியிருந்தது.
இன்றைய போட்டியும் விறு விறுப்புக்கு பஞ்சம் இல்லாத சிறந்த போட்டியாக அமையுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.