உலக உணவுத்திட்டத்தின் கீழ் அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கு விஷேட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அந்த கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமக்கு நிவாரணம் அவசியமில்லை என்பதுடன் வேதன உயர்வே அவசியமாகும் என பெருந்தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் கோதுமை மாவின் விலை ஏற்றம் காரணமாக தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவான் கல்லகே தெரிவித்துள்ளார்.