ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மீட்கப்பட்ட இந்த ஆண் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் அவர் வாகன விபத்தில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியின் அடிப்படையில், தேடுதல் இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கொட்டகலை ரொசிட்டா பகுதியில் வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.