லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கடந்த வருட போட்டியில் திசர பெரேராவின் தலைமையிலான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் உரிமை மாற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபல தமிழ் நிறுவனமான அல்லிராஜா சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் உரிமையினை வாங்கியுள்ளது.
கடந்த வருடம் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர் குழு ஒன்று ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் உரிமையினை வாங்கியிருந்தது. ஆனந்தன் ஆர்னோல்ட் மற்றும் ராஹுல் சூட் ஆகியோர் இணைந்து ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியினை முகாமைத்துவம் செய்து வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
ஏன் அவர்கள் அணியின் உரிமையினை லைக்கா நிறுவனத்துக்கு விற்பனை செய்தார்கள் என்பது தொடர்பான விபரங்கள் வெளிவரவில்லை.
லைக்கா நிறுவனம் இங்கிலாந்தில் மாத்திரமன்றி, இந்தியாவில் பிரமாண்டமான பட தயாரிப்புகள் அடங்கலாக பல வியாபாரங்களை செய்து வருகிரியாது. இலங்கையில் இரண்டு ஊடக வலையமைப்புகள் அடங்கலாக, ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையும் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங்ஸ் அணிகளது உரிமையாளர்களும் ஏற்கனவே விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.