இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 20-20 கிரிக்கெட் தொடர் இன்று (20.09) இரவு 7:30 இற்கு மொஹாலியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் மூன்று -20-20 போட்டிகள் மாத்திரமே நடைபெறவுள்ளன.
இன்று ஆரம்பிக்கும் தொடரின் போட்டிகள் மொஹாலி, நாக்பூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அணி விபரங்களையும் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியா அணி 15 வீரர்களையும், 2 விக்கெட் காப்பாளர்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்தியா அணி 16 வீரகளையும், 2 விக்கெட் காப்பாளர்களையும் அணியில் சேர்த்துள்ளது. தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய தமிழக வீரர்கள் இந்தியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டேவிட் வொர்னெர் இந்த தொடருக்கு எடுக்கப்படவில்லை.
உலக கிண்ண 20-20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடர், அணிகள் தங்களை உலக கிண்ண தொடருக்கு தயார் செய்ய முக்கியமானதாக அமைகிறது.
அணி விபரங்கள்
அவுஸ்திரேலியா அணி
1)ஆருண் பிஞ் (தலைவர்)
2) பட் கமின்ஸ் (உப தலைவர்)
3)சீன் அப்பொட்
4)அஷ்டன் ஏகார்
5)டிம் டேவிட்
6)நெதான் எல்லிஸ்
7)கமரொன் கிறீன்
8)ஜோஷ் ஹசெல்வுட்
9)ஜோஷ் இங்கிலிஸ் (வி.கா)
10)கிளென் மக்ஸ்வெல்
11)கேன் ரிச்சர்ட்சன்
12)டானியல் சாம்ஸ்
13)ஸ்டீவன் ஸ்மித்
14)மத்யூவ் வேட் (வி.கா)
15)அடம் சம்பா
இந்தியா அணி
1)ரோஹித் ஷர்மா (தலைவர்)
2)லோகேஷ் ராஹுல் (உப தலைவர்)
3)ரவிச்சந்திரன் அஷ்வின்
4)ஜஸ்பிரிட் பும்ரா
5)யுஸ்வேந்திர சஹால்
6)தீபக் சஹார்
7)தீபக் ஹூடா
8)தினேஷ் கார்த்திக்(வி.கா)
9)விராத் கோலி
10)புவனேஷ்வர் குமார்
11)ஹார்டிக் பாண்ட்யா
12)ரிஷாப் பான்ட் (வி.கா)
13)அக்ஷர் படேல்
14)ஹர்ஷால் படேல்
15)உமேஷ் யாதவ்
16)சூரியகுமார் யாதவ்