பிராபகரன் வீட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது.

காணியில் இருந்த வீடு முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காண்பபடுவதனால் காணியினுள் பற்றைகள் வளர்ந்துள்ளன.

பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது எனவும், குறித்த காணியினை உடனடியாக துப்புரவு செய்ய வேண்டும் எனவும் , இல்லாவிடின் அதனை நகர சபை கையகப்படுத்தும் என சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply