இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலகினார் மோடி

இலங்கை கிரிக்கெட் பணிப்பாளர் பதவியிலிருந்து ரொம் மோடி விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று குழுவுக்கும், ரொம் மோடிக்கும் இடையிலான சந்திப்பில் சுமூகமான முறையில் இரு தரப்பினது சம்மதத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தொழில் நுட்ப ஆலோசக குழுவிடம் ரொம் மோடி தனது வேலைகள் தொடர்பில் அறிக்கையழித்து வந்த நிலையில், தொழில் நுப்பட குழுவின் காலமும் நிறைவடைவதனால் இனி அவரது சேவைகள் தேவைப்படாது என கருதியமையினால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் முதலாம் திகதி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் பரிந்துரைகளின் கீழ் கிரிக்கெட் பணிப்பாளாராக ரொம் மோடி நியமிக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் ரொம் மோடியின் சேவைக்கு இலங்கை கிரிக்கெட் நன்றி தெரிவித்துள்ளது. அத்தோடு அவரது எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

“இலங்கை கிரிக்கெட்டுக்கு தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கிரிக்கெட்டுக்கு மீண்டும் சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்தமை பாக்கியமாகும் எனவும், தான் பெருமையடைவதாகவும்” ரொம் மோடி கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply