எரிபொருள் உற்பத்தி ஒயில் விலை வீழ்ச்சி

எரிபொருள் உற்பத்திக்காக பாவிக்கப்படும் ஒயில் வகையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்துக்கு பின்னர் முதற் தடவையாக ஒரு பரலின் விலை 80 டொலரிலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 டொலருக்கும் அதிகமாக காணப்பட்ட குறித்த ஒயிலின் விலையில் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியானது பணவீக்கத்தினால் அவதிப்படும் மக்களுக்கு ஒரு நிவாரணமாக அமையுமென எதிர்பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ள ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியானது ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்சியாவிடமிருந்து எரிபொருள் கொள்வனை நிறுத்துவது என்ற முடிவினை மாற்றும் செயற்பாடாக அமையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியானது இலங்கையின் விலையில் வீழ்ச்சியினை ஏற்படுத்துமா என்பது இதுவரையில் வெளியாகவில்லை.

கடந்த பெப்ரவரி மாதம் ரஸ்சியா யுக்ரைன் மீதான போரை அறிவித்து ஆரம்பித்தது முதல் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்தது. இதன் மூலமாக அமெரிக்காவின் எரிபொருள் விலையேற்றம் கடுமையாக அதிகரித்ததாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச சந்தையிலும் விலையேற்றம் ஏற்பட்டது.

சர்வதேச ரீதியிலான ஒயில் விநியோகம் இறுக்கமாக காணப்படுகிறது. ஆனாலும் கேள்வியும் குறைவாகவே காணப்படுகிறது. சீனாவில் காணப்படும் வலுசக்தி கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒயில் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணி எனவும், அது கடந்த கொரோனோ தாக்கத்தினால் சீனாவின் முக்கிய நகரங்கள் முடக்கப்பட்ட நிலையில் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் அமெரிக்க ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply