பொதுசேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, எரிபொருள் உற்பத்திக்கான க்ரூட் ஒயில் மின் உற்பத்திக்கு தரமானதாக இல்லையென கூறியமை தொடர்பில் சட்ட ரீதியான பதில் வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், சட்ட ரீதியாக பதிலளிக்கும் என ட்விட்டர் மூலமாக அமைச்சர் கருத்து கூறியுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதியளவு டீசல் மற்றும் எரிபொருள் ஒயில் கையிருப்பில் இருக்கின்றது. லக்ஷபான விநியோகத்தில் ஏற்பட்ட தடை காரணமாகவே மேலதிக மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் காஞ்சன விஜயசேகர மேலும் கூறியுள்ளார். அத்தோடு டீசல், எரிபொருள் ஒயில், மின் உற்பத்தி போன்றவரை முகாமைத்துவம் செய்வதற்கு போதிய பணம் இலங்கை மின்சாரசபையிடம் இல்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பொதுசேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எரிபொருள் உற்பத்திக்காக கொள்வனவு செய்யப்பட்ட க்ரூட் ஓயிலில் அதிகளவிலான சல்பர் காணப்படுவதாகவும் மின் உற்பத்திக்கு அதனை பாவிக்க முடியாது எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.