வசூல் மழையில் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 01 திரைப்படம் முதல் மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் முதல் 03 தினங்களில் 230 கோடி வசூல் செய்துள்ளது. அண்மையில் கமலின் விக்ரம் படைத்த சாதனைகளை முறியடித்து சாதனைகளை படைத்துள்ளது.

முதல் நாளில் 80 கோடியினை தாண்டி தமிழ் திரைப்படமொன்று முதலில் நாளில் பெற்ற அதிகூடிய வசூல் என்ற சாதனையினை பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.

லைக்கா புரடக்ஷன் சுபாஷ்கரன் மற்றும் மணிரத்னம் ஆகியோரது தயாரிப்பில், மணிரத்தினத்தின் இயக்கத்தில் A.R ரஹ்மான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்ஜராய் பச்சன், த்ரிஷா, பிரபு, சரத்துக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மேலும் வசூலை இந்த படம் பெறுமென்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. இந்தியாவின் அதிக வசூலை பெற்றுக்கொண்ட திரைப்படம் டன்கால் ஆகும். 2200 கோடி வருமானத்தை குறித்த படம் வசூல் செய்தது. பொன்னியின் செல்வன் அதிக வசூலை பெற்றுக்கொண்ட திரைப்படங்களுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Social Share

Leave a Reply