மகளிர் ஆசிய கிண்ணம் ஒன்பதாம் நாளில் தாய்லாந்து, பாகிஸ்தான் வெற்றி
தாய்லாந்து மகளிர் மற்றும் மலேஷியா மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (09.10) சைல்ஹெட்டில் முதற் போட்டியாக நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மலேஷியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றது. இதில் நன்னபட் கொஞ்சரோங்கை 41 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அணியின் தலைவி வினிபிரேட் துரைசிங்கம் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய மலேஷியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் திபட்சா புத்தவோங் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
தாய்லாந்து அணி 50 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகியாக நன்னபட் கொஞ்சரோங்கை தெரிவு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் மகளிர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகளுக்குக்கிடையில் இரண்டாவது போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆலியா ரியாஸ் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் (இது ஆலியா ரியாஸின் முதல் அரைச்சதமாகும்) , முனீபா அலி 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஈஷா ஒஷா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் சதியா இக்பால, ஐமன் அன்வர், நஷ்ரா சந்து, ஒமைமா சொஹைல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பாகிஸ்தான் அணி 71 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகியாக ஆலியா ரியாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
மலேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ள. மலேஷியா அணி சகல போட்டிகளிலுமேயே தோல்வியடைந்ததனால் வெளியேறப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் 6 புள்ளிகள் எடுக்க முடியாத காரணத்தினால் வெளியேறப்பட்டது.
இந்தியா மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணி, இலங்கை மகளிர் அணி, தாய்லாந்து மகளிர் ஆகிய அணிகள் ஆசிய கிண்ண மகளிர் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
நாளை (10.10) காலை 08:30 இற்கு பங்களாதேஷ் மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையில் சைல்ஹெட்டில் முதற் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா மகளிர் மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகளுக்கிடையில் சைல்ஹெட்டில் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி தாய்லாந்து மகளிர், இந்தியா மகளிர் ஆகிய அணிகளின் இறுதிப்போட்டியாகும். நாளைய போட்டிகளில் அரை இறுதி அணிகள் நான்கும் தெரிவாகும் நிலை உருவாகலாம்.