இலங்கைக்கு 20-20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் வெற்றி

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (11.10) அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் 20-20 உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியின் முதற் போட்டியாக நடைபெற்றது. வனிது ஹசரங்கவின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் தடுமாறிக்கொண்டிருந்த இலங்கை அணி மீண்டும் எழுந்து வந்தது. சிம்பாவே அணி 11 பேருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்துள்ளது.

நாணய சுழற்சியல் வெற்றி பெற்ற சிம்பாவே அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரட் இவன்ஸ், ரியான் புர்ள், சிகந்தர் ராசா, வெஸ்லி மாதவேர், மில்டன் ஷும்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. இதில் வெஸ்லி மாதவேர் 42 ஓட்டங்களையும், மில்டன் ஷும்பா 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சமிக்க கருணாரட்ன, மஹேஷ் தீக்ஷண ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினாரக்ள்.

இலங்கை அணி 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

Social Share

Leave a Reply